About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Feb 2, 2010 / பகுதி: வரலாறு /

தமிழர் வரலாற்று நிகழ்வு:ஒரு மீள்பார்வை. ஆக்கம். யோதிலிங்கம். பாகம் 3

1921-1949

தமிழ் மக்களின் அரசியல் தனித்தவமான உருவாகிய காலம் 1922- ஏ. ஈ. குணசிங்கவின் தொழில் சங்க அரசியல்.
        

சேர் பொன் அருணாசலத்தின் அடி தொட்டு தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் குணசிங்க. இவருடைய தொழிற்சங்கததில் உப தலைவராக இருந்தவர் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதியான நடேசையர்.
 

ஆனால் காலஞ் செல்லச் செல்ல குணசிங்க அநகரிக தர்மபாலாவின் இநவாதத்தைத் தழுவிக்கொள்கிறார். முதலில் முஸ்லிம்களுக்கெதிராக இன வாதத்தைக் கக்கிய இவர் பின்னர் மலையாளித் தொழிலாளிகளுக்கெதிராகத் திரும்புகிறார். நடேசையர் கருத்து வேற்றமையினால் வெளியேறுகின்றார். தொழிலாளர் இயக்கம் இன ரீதியாகப் பிளவுபடுகின்றது.

 

1924 ல் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் தோற்றம்.

இதன் தோற்றத்துடன் தமிழ் அரசியலில் இரு அணிகள் உருவாகின்றன. யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் ஐக்கிய இலங்கையைக் குறித்து முழு நாடும் ஆங்கிலேயரின் காலனித்தவ ஆட்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறது. இந்த முறையில் அது இந்தியத்தேசிய காங்கிரசைப் பின்பற்றுகின்றது. தமிழர் மகாஜன சபையோ தமிழ் மக்;களின் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுகின்றது. இது இந்திய வம்சாவளியினர். ஐரோப்பியர் பறங்கியர் ஆகியோருடன் இணைந்து சிறுபான்மையினராகத் தம்மை விபரித்து இனச் சமூகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

இதனால் மானிங் -டிவன்சயர் சீர் திருத்;தம் ஆங்கிலேய ஆட்சியினால் கொண்டு வரப்படுகின்றது. இதன் முக்கிய அம்சங்களாவன, மேல் மாகாணத் தமிழர்களுக்கு  தனியான பிரதிநிதித்துவம் வழங்கப்படுதல். நிதிக்குழுவில் சுதேசிகளுக்கு இடம் வழங்குதல். பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் விஸ்தரிக்கப்படுதல் என்பனவாகும்.
இச் சீர் திருத்தத்தின் விளைவாக சிறுபான்மையோரின் ஐக்கிய முன்னணி சிதைவடைகிறது. கரையோரச் சிங்களவர்களின் பொருளாதார ஆதிக்கத்தினால் கண்டிச் சிங்களவர்களும் தனியான அரசியலை நோக்கி நகருகின்றனர்.

 

1925 ல் கண்டித் தேசிய மாநாடு

கண்டிச் சிங்களவர் முதன் முதலாக சமஸ்டி ஆட்சி தங்களுக்கு வேண்டும் என்கின்ற கோரிக்கைய முன்வைக்கின்றனர். எஸ். டபிள்யூ. ஆர். டீ . பண்டாரநாயக்கா இக் கோரிக்கையினை ஆதரித்து கண்டி கரையோரம், வடக்கு கிழக்கு என மூன்று பிரதேசமாக சமஸ்டி அரசுகளாகப் பிரிக்கப்படவேண்டும் எனக் கோருகின்றார்.

அவர் யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் உதவியுடன் யாழ்;ப்பாணத்திலும் சமஸ்டி ஆட்சிக்கான பிரசாரத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றார். தமிழ்த் தலைவர்கள் சமஸ்டிக் கேரிக்கையினை நிராகரித்து ஒற்றையாட்சி அமைப்பிற்குள் இனச் சமூகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு அவற்றுக்கு சகல துகைளிலும் சம வாய்ப்புக்கள் தரப்படவேண்டும் என்கின்ற கோரிக்கையினைத் தொடர்ந்தும் முன்வைக்கின்றனர்.
  யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் பூரண சுயாட்சி வேண்டும் என்ற பிரசாரத்தோடு சாதிஒழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றது. மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல பகுதிகளுக்கு வருகைதந்து மக்களைச் சந்திக்கின்றார்.

 

1931 ல் டொனமூர் அரசியல் சட்டம்

டொனமூர் பிரபுவிடம் கரையோரச் சிங்களவர் உள்ளுர் சுயாட்சியையும், கண்டிச்சிங்களவர்கள் கமஸ்டிக் கோரிக்கைகளையும் தமிழர்கள் ஒற்றையாட்சிக்கள் இனச் சமூகப் பிரதிநிதித்துவக் கோரிக்கையையும் முன்வைக்கின்றனர். இந்த அரசியல் திட்டத்தின் கீழ் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு. பிரதேச

          1931டொனமூர் திட்டத்தின் கீழ் நடை
          பெற்ற முதலாவது பொதுத் தேர்தலை
          யாழ். குடாநாடு பகீஸ்கரிக்கின்றது.
          தென் இலங்கைத் தலைவர்கள் முதலில்
          பகீஸ்கரிப்பதாகக் கூறி பின்னர்
          அதனைக் கைவிட்டு தேர்தலில்
          பங்கெடுக்கிறார்கள்.

வாரிப் பிரதிநிதித்துவக் கட்டமைப்பு மேலும் விஸ்தரிக்கப்பட்டது. இதன் கீழ் எண்ணிக்கையில் குறைந்த இனங்கள் பாதிக்கப் படலாம் என்பதற்காக இனங்கனைப் பாதுகாக்கும் வகையில் மறுப்பாணை அதிகாரம் தேசாதிபதியிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையருக்கு சுயாட்சி அரைவாசிதான் கொடுக்கப்பட்டது.

இனச் சமூகங்கள் பிரதிநிதித்துவம் பின்பற்றப்படவில்லை என்பதற்காக தமிழர் மகாஜன சபை டொனமூர் சீர்திருத்தத்தினை எதிர்க்கின்றது. யாழ்ப்பாண வாலிப காங்கிரசோ பூரண சுயாட்சி வழங்கப் படவில்லை என்பதற்காக எதிர்த்தது. டொனமூர் திடடத்தின் கீழ் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலை யாழ் குடா நாடு பகீஸ்கரிக்கின்றத. தென் இலங்கைத் தலைவர்கள் முதலில் பகீஸ்கரிப்பதாக கூறி பின்னர் அதனைக் கைவிட்டு தேர்தலில் பங்கெடுக்கின்றார்கள்.

டொனமூர் சீர்திருத்தத்தின் விளைவாக பேரினவாதச் செயற்பாடுகள் அரச அதிகாரக் கட்டமைப்பினூடாக முன்னெடுக்கப்பட ஆரம்பித்தன. குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு எதிரான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. உதாணமாக நெற்காணிச்சட்டம்,மீன் பிடிச் சட்டம், போக்குவரத்து அனுமதிச் சட்டம் போன்றவற்றைக் காட்டலாம். இச் சட்டங்கள் இந்திய வம்சாவளிமக்களுக்கு நெற்காணிகள் சொந்தம் கொள்வதையும் மீன்பிடி அனுமதிப் பத்திரத்தையும் பொதுப் போக்கவரத்துச் சேவைகளை நடாத்தவதற்கான அனுமதியையும் நிராகரிக்கின்றன. இலகுவில் இத் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கக் கூடிய வேலை நீக்;கச் சட்டமும் கொண்டு வரப்படுகின்றது.

 

பேரினவாத அரசியல், அரச கட்டமைப்பினூடு முன்னெடுக்கப் பட்டதால் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் முன்வைத்த தேசிய ஒன்றிணைப்பு அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டு தமிழ் இனத்தைப் பிரதானப் படுத்திய அரசியல் முன்னெடுக்கிறது. இதனால் 1934 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இன அரசியலை முன்னெடுத்த  தலைவர்கள் வெற்றியடைகின்றனர். ஜீ.ஜீ. பொன்னம்பலம் அரசியலில் பிரவேசிக்கின்றார்.

 

வரலாற்று நிகழ்வுகள் தொடரும் காத்திருங்கள்.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய

Jul 19, 2010

பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் நீதி வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன.




Guranteed Pass