பெடரர்,​​ செரீனா ​தொடர்ந்து முதலிடம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்கள் ரோஜர் பெடரர்,​​ செரீனா வில்லியம்ஸ் இருவரும் சர்வதேச டென்னிஸ் தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முடிவடைந்த நிலையில் திங்கள்கிழமை சர்வதேச டென்னிஸ் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.​ இதில் தொடர்ந்து 268-வது வாரமாக,​​ பெடரர் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.​ ​

 

நோவக் ஜோகோவிக் 2-ம் இடத்திலும் ஆஸ்திரேலிய ஓபனில் பெடரரிடம் தோல்வியடைந்த ஆன்டி முர்ரே 3-வது இடத்திலும் உள்ளனர்.​ காயம் காரணமாக போட்டிகளில் விளையாடாத ரஃபேல் நடால் 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

 

2005 ஜூனில் இருந்து தரவரிசையில் முதல் மூன்று இடத்துக்குள் நடால் இருந்து வந்தார்.

 

மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.​ ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய சீனாவின் லி நா,​​ 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.​ இதன் மூலம் தரவரிசையில் முதல் 10 இடத்துக்குள் வந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.