அவுஸ்திரேலியா ரெனிஸ்போட்டி இறுதிச் சுற்றில் செரீனா ஜஸ்டின்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்) மோதுகின்றனர்.

 

மெல்பர்னில் நேற்று நடந்த அரை இறுதியில் சீனாவின் ஜி ஸெங்குடன் மோதிய ஹெனின் 6,1, 6,0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஹெனின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே தகுதி பெற்றார்.

 

இன்று நடக்கும் 2வது அரை இறுதியில் நம்பர் 1 வீரர் ரோஜர் பெடரர் (சுவிஸ்)  வில்பிரைடு சோங்காவுடன் (பிரான்ஸ்) மோதுகிறார்.