மெல்பேர்ன் ரெனிஸ்அரையிறுதியில் ரோஜர் பெடரர், சோங்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், பிரான்ஸின் ஜோ-வில்பிரட் சோங்காவும் தகுதி பெற்றனர்.

 

புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில், தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள பெடரர், ரஷியாவின் நிகோலே டேவிடென்கோவை 2-6, 6-3, 6-0, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.