
நுரையீரலில் இருந்து வெளிப்படும் காற்றினால் குரல்வளை அசைந்து ஒலியை உண்டாக்குகின்றது. இது குரலாகத் தொண்டை, வாய், மூக்கு, நாக்கு ஆகியவற்றைக் கடந்து மேல் நோக்கி வரும் போது இவ்வுறுப்புகளின் அசைவுகளினால் வார்த்தையாக வாயின் வழி வெளிப்படும். இந்த வெளிப்பாட்டில் தங்கு தடை ஏற்படும் போது திக்குவாய் ஏற்படுகின்றது.
பொதுவாக திக்குவாய் குழந்தைகளுக்கும், சிறியவர்களுக்கும் வருகிறது. சிலருக்கு பிறவியிலேயே திக்குவாய் அமையலாம். சிலருக்கு இடையிலேயும் திக்குவாய் வரக்கூடும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இது அதிகமாக வருகிறது.
இடக்கைப் பழக்கத்தை வலக்கைப்பக்கமாக மாற்றும் போது, திக்குவாய் ஏற்படுகின்றது.
திக்குவாய் என்பது பேச்சில் ஏற்படும் ஒரு தடங்கல் ஆகும். பேசிக்கொண்டிருக்கும் போது பேச்சு நின்று விடலாம். அல்லது ஒழுங்காக ஏற்படும் பேச்சுத் திக்கித் திணறலாம்; இவ்வாறு ஏற்படும் பேச்சுத் திணறல் பலவிதமாக வெளிப்படலாம்.
இவ்வாறு திக்குவாய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
மூளையின் ஒரு பகுதி உடலை இயக்குகின்றது. மறு பகுதியும், தன் வேலையை நிறுத்தாமல் இயங்குவதால் வார்த்தை தடுமாற்றம் ஏற்படுகின்றது. ஒரே குடும்பத்தில் பலருக்கு திக்குவாய் வருவதுண்டு. பொதுவாக குழந்தைகளுக்கு வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக புதிதாக வரும் போது திக்குகிறது. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு மனதில் தடுமாற்றம் இருக்குமானால் வாய் திக்கும். அதே போல சூழ்நிலைகளைப் பொறுத்தும் ஏற்படலாம்;.
திக்குவாயைக் குணப்படுத்துவதற்கு:
நோயாளியை துணிவுள்ளவர்களாக மாற்றவேண்டும். தாழ்வு மனப்பான்மையை முற்றிலும் மாற்றவேண்டும். நோயாளி திக்காமல் ஒன்றுக்கு இரண்டு முறையாகப் பேசிப் பழக வேண்டும். பேசும் போது உடலை இலகுவாக்கிக் கொள்ளவேண்டும். மூச்சுப்பயிற்சி செய்து பழகவேண்டும். கண்ணாடிமுன் நின்று பேசி அங்க அசைவுகளைக் கட்டுப்படுத்துதல்.
அதே போல மருத்துவர்களின் முறையிலும் திக்குவாயை நிவர்த்தி செய்யலாம்.
நன்றி: மருத்துவ அறிவியல் மலர்.
| » | அன்பான பழைய மாணவர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்: சி. வரதராஜன். |
| » | பிரான்சில் சங்கொலி பாட்டுத்திறன் போட்டி. |
| » | இத்தாலியில் வட்டுக்கோட்டைத் தீர்மானமானத்திற்கான வாக்கெடுப்பு. |
| » | சிறிலங்காவைப் புறக்கணிப்போம். பிரான்சில் கண்டன ஒன்று கூடல். |
| » | சமர்கள நாயகம் இறுவட்டு வருகின்றது |
| » | பேர்லினில் சொர்க்கத்தின் மறுப்பக்கம் |
| » | மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் ஆவணப்படுத்த ஓர் அவசர வேண்டுகோள். |
| » | அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு |
| » | எல்லாளன் திரைப்படம் விரைவில் உலகத் திரையரங்குளில் |
| » | முள்ளிவாய்க்கால் இறுவட்டு வெளிவந்துள்ளது!!! |
வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சொந்தமான பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சிறீலங்காப்படையினரால்
வடகிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டிய அதேவேளை தமிழ் தேசியம் குழிதோண்டிப் புதைக்கப்படாமல் அதைக் கட்டிக்
தேன்மதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய……..
அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியாவின் பழமை வாய்ந்த கட்சியான கொன்சேவேட்டிவ் கட்சியின் பிரமுகர்கள் பங்குபற்றியது தமிழ்