About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Jan 24, 2010 / பகுதி: வரலாறு /

தமிழர் வரலாற்று நிகழ்வு: ஓர் மீள்பார்வை.1833ல் இருந்து.... யோதிலிங்கம். பாகம்: 2

பாகம்: 2

1915 சிங்கள முஸ்லிம் கலவரம்

350 முஸ்லிம் கடைகள் எரிக்கப் படுகின்றன. 4075 முஸ்லிம் கடைகள் கொள்ளையடிக்கப் பட்டன. 189 பேர் காயமுற, 25 முஸ்லிம்கள் இறக்கின்றனர். 103 பள்ளிவாசல்கள் அழிக்கப் படுகின்றன. தமிழர் சிங்கள ஆதரவு நிலைப்;பாட்டினை எடுத்தனர். இதே வேளை கலவரங்களைத் தூண்டிய காரணத்திற்காக சிறைப்;படுத்தப் பட்ட சிங்களத் தலைவர்களை விடுவிக்கும் கோரிக்கையுடன் சேர் பொன் இராமநாதன் இலண்டன் பயணமாகின்றார். விடுவித்துக் கொண்டு திரும்பி வந்தபோது சிங்களத் தலைவர்களால் வெகுவாக கௌரவிக்கப் படுகிறார். இது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை விளைவிக்கின்றது. (முதலாம் பாகத்தொடர்ச்சி)


1919 இல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கம்.

1915 இல் கலவரத்தின் தாக்கத்தினால் சகல இன மக்களும் ஒரு தேசிய இயக்கத்தினை வேண்டி நிற்கின்றனர். இதற்காக இலங்கை அரசியல் சீர் திருத்தக் கழகம் என்ற அமைப்பு சேர் பொன் அருணாசலம் தலைமையில் 1917 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டு நாடு முழுவதும் பிரசாரம் செய்யப் படுகின்றது. பல அமைப்புக்களுடன் உடன் பாடு பெறப்பட்டு இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப் படுகின்றது. முதல் தலைவராக சேர் பொன் அருணாசலம்  எல்லோராலும் தெரிவு செய்யப் படுகிறார்; இந்த அமைப்பு சுயாட்சியையும் பிரதிநிதித்துவ முறையில் பெரும்பான்மை எண்ணிக்கை ஜனனாயகத்தையும் கோரிக்கைகளாக முன்வைத்தது.
 
1921 இல் முஸ்லிம்கள் தம்மைத் தனியான இனமாகப் பிரகடனம் செய்தல்.

முஸ்லிம்கள் சமூக அரசியல் தளங்களில் தாமும் ஒரு சக்தியாக ஒருவாக முனைகின்றனர். தமிழ் தலைவர்கள் அவர்களின் வரலாற்றை அசட்டை செய்து அவர்கள் செய்யும் தொழிலையும் இழிவாக நோக்கியதும் இதற்கு ஒர காரணமாயிற்று. தம்மைத் தமிழர் என்கின்ற இனத்துக்குள் அடக்க வேண்டாமென்றும் இலங்கை முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்கள் என்ற பதப் பிரயோகங்களைத் தவிர்த்து அனைவரையும் இலங்கை முஸ்லிம்கள் என அழைக்குமாறும் முஸ்லிம் தலைவர்கள் கோருகின்றனர்.

 1921 இல் மானிங் அரசியல் சீர்திருத்தம்.

இதுவரை படித்த பிரஜைகள் தான் வாக்களிக்கலாம் என்னும் விதிமுறை நடையிலிருந்தது. இதன் கீழ் ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள சனத்தொகையும் வாக்காளர்கள் எண்ணிக்கையும் பின்வரமாறு இருந்தது.

படித்தவர்களுக்கு வாக்கு என்கிற அடிப்படையில் தமிழர்களுக்கு மிக அதிகமான வாக்குகள் இருந்தால் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துமாறு சிங்களத் தலைவர்கள் கோரினர். இதன் பயனாக இனச் சமூகங்கள் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகம் நிராகரிக்கப் பட்டு பெரும்பான்மை எண்ணிக்கை ஜனநாயகம் முதன்மைப்படுத்தப்படும் வகையில் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப் படுகிறது.

ஆயினும் இந்திய வம்சாவளியினருக்கு விசேடமாக பிரதிநிதித்துவம் வழங்கப்படுகின்றது. நிர்வாகக் குழுவில் மட்டும் சுதேசிகளுக்கு இன அடிப்படையில் இடம் வழங்கப்படுகின்றது.

நாட்டின் அரசியல் கட்டமைப்பின் பிரதான சபைகளில் இனச் சமூகங்களின் பிரதிநிதித்துவம் நிராகரிக்கப்பட்டமையால் தமிழர்கள் தனியான அரசியலை நோக்கி ஆரம்பிக்கின்றனர்.

இது வரை காலமும் தமிழர் என்கின்ற அடையாளத்தைப் பண்பாட்டுத் தளத்திலும் இலங்கையர் என்கின்ற அடையாளத்தை அரசியல் தளத்திலும் பேணியவர்கள்,அதைக் கைவிட்டு இரண்டு தளங்களிலும் தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இலங்கையில் சிங்களவர்கள் தாம் பெரும்பான்மையினர் என்னும் உண்மையை

                   பௌத்த சிங்கள தேசியவாதம்
                   ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கெதிரான போராட்டமாக
                   இல்லாது நாட்டிலுள்ள ஏனைய இனங்களுக்கு
                   எதிரான கிளர்ச்சிகளாக உருவம் எடுக்கின்றது.

 
ஏற்றுக் கொண்டு சிங்கள மக்களுக்குரிய சலுகைகளுக்கான பல விட்டுக் கொடுப்புக்களைச்செய்ய தமிழர் முன் வரவேண்டும் என்று சிங்களத் தலைமைத்துவம் எதிர்பார்க்கின்து.

தமிழர் சேர் பொன் அருணாசலம் தலைமையில் இலங்கைத் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறி தமிழர் மகாஜன சபை என்ற அமைப்பினை 1921ம் ஆண்டு ஆகஸ்டில் உருவாக்குகின்றனர்.
                         


வரலாற்று நிகழ்வுகள் தொடரும். காத்திருங்கள்.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய

Jul 19, 2010

பிணக்கிற்க்ககான மூல காரணத்திற்க்கு அரசியல் நீதி வழங்காமல் ஒரு போர் முடிவுக்கு வர மாட்டாது காலனித்துவ நாடுகளைக் கைப்பெற்றவும் அவற்றைத் தமது பிடியில் வைத்திருப்பதாகவும் இரண்டாம் உலகப் போரில் பங்கு பற்றிய நாடுகள் போரிட்டன.




Guranteed Pass