செவ்வாய், ஜனவரி 19, 2010 18:40 | நிருபர் கயல்விழி
அகத்தின் அழகு தோலில் தெரியும்.
முதுமையின் அடையாளம் தோலில்தான் முதலில் வெளிப்படுகின்றது. உடல் எடை அதிகரிக்கும் போது, தோலின் இழுவைத் தன்மை காரணமாக விரிவையும் அடைகின்றது.
உடலின் தோலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு விட்டமின் “ஏ” சத்து அவசியமாகும். முக்கியமாக முட்டை, கடல் உணவு, மாம்பழம், கரட், சக்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றில் விட்டமின் “ஏ” சத்து நிறைந்து காணப்படுகின்றது.
அதே வேளை காய்கறிகளை அதிக நேரம் சமைத்தால் ஊட்டச்சத்து அழிந்து விடும் எனவும், அத்துடன் காய்களைக் கழுவும் போது அதிக நேரம் தண்ணீரிலேயே விட்டுவிடக் கூடாது எனவும் எனவும் இவ்வாறு செய்வதினால் விட்டமின் “சி” அழிந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தோலுக்கு அடுத்தபடியாக முடிதான் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கின்றது.சிலர் தவறான உணவுப் பழக்கங்கள் மூலம் முடியை மோசமாக்கி விடுகின்றார்கள். புரதச் சத்து உணவு குறையும் போதே முடி உதிரும் தன்மை ஏற்படுகிறது எனவும் முட்டை, பால், தானியம், கீரை போன்றவற்றை அதிகம் உண்ணும் போது அமினோ அமிலம் சத்து அதிகரிக்கும். முடியும் செழிப்பாக வளரும்.
சத்தான உணவில், ஆரோக்கியமும் இளமைத் தோற்றமும் சாத்தியமாகும். உடலுக்குத் தேவையானவற்றை அளவோடு உண்டால் அனைத்து துன்பமும் நீங்கி ஆனந்தமாக வாழலாம்.