பாகம் 1
பிரித்தானியாவிற்குக் கீழான ஆட்சியில், இலங்கையரும் பங்கு பெறுவதற்கான அரசியலமைப்புத் திட்டங்கள் தீட்டப்பட்ட காலம்.
1833 கோல் புறூக் அரசியல் சீர் திருத்தம்.
இச் சீர் திருத்தமானது, காலனித்தவ அரசியல் நிர்வாக வலைப்பின்னலுக்குள் இலங்கையையும் இணைக்கும் முயற்சியாகும். இலங்கையின் பன்முகத் தன்மை,அதன் அடையாளம் என்பவற்றைக் கவனத்தில் எடுக்கவில்லை. சமூகங்களின் விருப்பங்களைக் கேளாமல் ஒற்றை அதிகார கட்டமைப்பின் கீழ் அனைத்து சமூகங்களையும் கொண்டு வருகின்றது. எனினும் சட்ட சபைக்கான பிரதிநிதித்துவ முறையில் சமூகங்களின் ஜனனாயகத்தை பேணும் வகையில் இனவாரிப் பிரதிநிதித்துவ முறையினை அமுல் படுத்துகின்து.
பிரதிநிதித்துவ முறையில் ஆரம்மப காலங்களில் முஸ்லீம்களையும் தமிழர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். அக்காலத்தில் முஸ்லீம் மக்கள் கரையோரச் சோனகர்கள், மலேயர்கள் என பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கப்பட்னர். இவர்களுள் கொழும்பு- கண்டி போன்ற நகரங்களை நிலை கொண்டு செல்வாக்கள்ளவர்களாக இருந்தவர்கள் மலேயர்கள் ஆவர்வகள். மலேயர்களின் தலைவர்கள் முஸ்லிம் மக்களின் குரலாக ஒலித்தனர். அந்தப் பின்னணியில் அவர்கள் முஸ்லிம்கள் தமிழ்மக்கள் அல்ல என்னம் வார்த்ததையை முன்வைத்தனர் இதன் பயனாக 1889ம் ஆண்டு சுதேசிகளின் பிரதிநிதித்தவ எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டபோது முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து கண்டியச் சிங்களவர்களுக்கும் ஒவ்வொரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. சுதேசிகள் அரசியல் சக்திகளாக உருவாகின்ற போக்கு ஆரம்பிக்கின்றது.
1800 களில் பெருந்தொட்டதுறை அறிமுகம்.
இந்தியத் தொழிலாளர் வருகை, இந்திய-முஸலிம் வியாபாரிகள் வருகை, மலையாளித் தொழிலாளர் வரை. கொழும்பு தலைநகரமாக்கப் டப்டதால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் கொழும்பு நிர்வாகத்துடன் இணைக்கப்படுகின்றது.
1800 களின் கடைசிப் பகுதிகள்- சிங்கள பௌத்த தேசியவாத உருவாக்கம்.
காலனித்துவவாதிகளுக்கு எதிராக எழுந்த போராட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டமாக உருவெடுக்கின்றது. இது தனியே கலாச்சார சீரழிவு, பௌத்த மதத்தின் மறு மலர்ச்சி, மத பாவனைக்கெதிரான எழுச்சிபோன்றவற்றையே அடங்கியதாக இருந்தது. அநாகரிக தர்மபாலாவின் வருகையும் இயக்கமும் இந்தக் கால கட்டத்தில் நிகழ்கின்றது.
முஸ்லிம் வியாபாரிகளுடனான வியாபாரப் போட்டிகள் முஸ்லிம் இனத்திற்கெதிரான உணர்வாக சிங்கள மக்களிடையே உருவெடுத்;தது. லக்மின, தினமின சிங்கள ஜாதிய, சிங்கள பௌத்தய போள்ற பத்திரிகைகள் முஸ்லிம் இனத்தவர்களுக்கும் மலையாள இனத்த்வர்களுக்கம் எதிரான கீழ்த்தரமான வாசகங்களைப் பிரசுரிக்கின்றன.
மொத்தத்தில் பௌத்த சிங்கள் தேசிய வாதம் ஆங்கிலேய ஆட்சியாளருக்கெதிரான போராட்டமாக இல்லாது நாட்டிலுள்ள ஏனைய இனங்களுக்கு எதிரான கிளர்ச்சிகளாக உருவங்கள் இருக்கின்றன.
1915 சிங்கள முஸ்லிம் கலவரம்.
350 முஸ்லிம் கடைகள் எரிக்கப் படுகின்றன. 4075 முஸ்லிம் கடைகள் கொள்ளையடிக்கப் பட்டன. 189 பேர் காயமுற, 25 முஸ்லிம்கள் இறக்கின்றனர். 103 பள்ளிவாசல்கள் அழிக்கப் படுகின்றன. தமிழர் சிங்கள ஆதரவு நிலைப்;பாட்டினை எடுத்தனர். இதே வேளை கலவரங்களைத் தூண்டிய காரணத்திற்காக சிறைப்படுத்தப் பட்ட சிங்களத் தலைவர்களை விடுவிக்கும் கோரிக்கையுடன் சேர் பொன் இராமநாதன் இலண்டன் பயணமாகின்றார். விடுவித்துக் கொண்டு திரும்பி வந்தபோது சிங்களத் தலைவர்களால் வெகுவாக கௌரவிக்கப் படுகிறார். இது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை விளைவிக்கின்றது.
வரலாற்று நிகழ்வுகள் தொடரும். காத்திருங்கள்.