ஞாயிறு, ஜனவரி 10, 2010 14:28 | நிருபர் கயல்விழி
குழந்தையை தூளியில் போடுவது எதற்காக.
குழந்தை பிறக்கும் போதே அழுகை ஒலியோடுதான் உலகத்தை எட்டிப் பார்க்கிறது. இதற்குக் காரணம், பயம்!
காயின் கருப்பையில் அது தன்னை பாதுகாப்பாக உணர்கிறது. கருப்பை திரவத்தில் மிதக்கும் ஒரு பந்து போல, அலுங்காமல், குலுங்காமல் அது நீந்தி லிளையாடிக் கொண்டிருக்கும். அதற்கு வெளிச்சம் பற்றிய உணர்வே அப்போது இருக்காது. கருப்பையில் அது பார்ப்பது இருட்டைத்தானே... அதோடு, அம்மாவின் கருப்பையில் மிதமான கதகதப்பையும் அனுபவித்தபடி இருக்கும்.
ஆனால், இந்த உலகத்துக்குள் நுழையும் பேர்து புதிதாக காற்று, குளிர், சத்தம், பிரகாசமான வெளிச்சம்.. இது எல்லாமே அதற்கு புதுசு! யாரும் தொட்டுப் பார்க்காமல் இருந்த அந்த பிஞ்சுக்கு நம் விரலால் தொடுவது கூட வலிக்கும்.
சில நொடிகளிலேயே தடாலடியாக இத்தனை மாற்றங்கள் நிகழும் போது அது மிரண்டு விடுகிறது. ஏதோ தப்பான இடத்திற்கு வந்து விட்டோமோ! என்று பயந்து அழுகிறது. இந்தப் பயத்தைப் போக்கத்தான் குழந்தை பிறந்ததும் தாயின் அருகில் நெருக்கமாக குழந்தையை வளர்த்துகிறார்கள். தாயின் உடம்புச் சூடு குழந்தைக்குக் கிடைத்தால் கிட்டத்தட்ட அதற்குக் கருப்பைச் சூழல் கிடைக்கும்.
குழந்தையைக் கிடத்தும் துணியில் மடிப்புக்களோ முடிச்சுக்களோ இல்லாமல் பாரத்துக் கொள்ளல் அவசியம். புதிதாக வாங்கிய துணியில் குழந்தையை வளர்த்தாமல் துவைத்து உலர்த்திய துணியிலேயே குழந்தையை வளர்த்தவேண்டும். குழந்தையை தூளியில் போட்டு ஆட்டும் போது அழுகை அடங்கி ஆனந்தமாக சத்தமிடும். இந்தத் தூளி ஆட்டம், அதற்கு கருப்பையில் இருந்தபோது அம்மா நடந்த சமயங்களில் கிடைத்தது போன்ற இதமான அதிர்வுகளைக் கொடுக்கும். தவிர, தூளியில் அடிக்கடி போட்டுப் பழக்குவதால் குழந்தையின் உடல் வடிவமும் அமைகிறது.
ஆனால், குழந்தை தூளியில் புரண்டு கவிழ்ந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிக் கவிழ்ந்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
கருப்பை என்ற திரவ உலகில் இது வரை வாழ்ந்த குழந்தை காற்ற நிறைந்த உலகத்திற்கு வந்த பின்பு அதன் நரம்பு மண்டலச் சூழல் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றம் செய்து கொள்கிறது.
.