About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Nov 11, 2009 / பகுதி: செய்தி /

கொக்கிளாயிலும் கல்குடாவிலும் தம்மை மீண்டும் குடியமர்த்துமாறு சிங்கள குடியேற்றவாசிகள் கோரிக்கை

சிங்கள் அரசாங்கங்களினால் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்புக்களை துண்டாடும் நோக்குடன் குடியேற்றப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைபேர் பலம் பெற்று நடந்து கொண்டிருக்கையில் அச்சம் காரணமாக வெயியேறிய சிங்கள குடியேற்றவாசிகள் தம்மை மீண்டும் அதே பகுதிகளில் குடியுற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏறத்தாள 125 குடும்பங்களை சேர்ந்த சிங்களவர்கள் சிறீலங்காவின் நாடாளுமன்று உறுப்பினரும் மகிந்தவின் சகோதரரும் வடகிழக்கு செயலணியின் தலைவருமான பசிலை சந்தித்து இவ் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்தச் சிங்களவர்கள் தற்போது அரசினால் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் நீர்கொழும்பு குருநாகல் மற்றும் கழுத்துறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன.

அண்மையில் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கல்குடா சென்ற சில சிங்களவர்கள் தமது வீடுகள் முற்றாக சேமடைந்துள்ளதாகவும் அதை புனரமைக்க தமக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் தாயகத்தின் பல இடங்களில் 1990களிற்கு முற்பட்ட காலத்தில் இருந்து உயர் பாதுகாப்பு வலயம் என்னும் பேரில் வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் இன்னும் அகதிகளாக பல இடங்களில் வாழ்ந்து வருகின்றமையும் அவர்கள் அதாவது யாழ் வலிகாமத்தின் பல இடங்களில் இவ்வாறான உயர் பாதுகாப்பு வலயத்தினை அண்டியுள்ள பிரதேசங்களில் மீளவும் தமிழ் மக்க குடியமர்த்த உயர் நீதி மன்று வழங்கிய கட்டளைகூட இன்னும் சரிவர செயற்படுத்தப்படாது உள்ள நிலையில் சிங்களவர்களின் இவ் கோரிக்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப்போகின்றது என  இடம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள்
கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass