யேமன் நாட்டின் விமான விபத்து. 13வயது சிறுமி மீட்பு.

யேமன் நாட்டின் விமான விபத்தில் சிக்கிய 13வயது சிறுமியான பகியா பகாறி இன்று வியாழக்கிழமை பாரீஸ் நகரம் அழைத்துவரப்பட்டுள்ளார்.  இவருக்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

சிறுமியினுடைய முகப்பகுதியில் காயங்கள் அதிகமாக காணப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தகப்பனார் தெரிவித்துள்ளதின் படி சிறுமி நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

 

துரதிஷ்டவசமாக அவளது தாயார் அருகில் இல்லை என ஆழ்ந்த மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.  (தாயார் விமான விபத்தில் இறப்பைத் துழுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

 

அதே நேரம் பாரிஸ் நகரத்தில் உள்ள பள்ளிவாசலில் விசேட தொழுகை நடைபெறவுள்ளது.


இதே நேரம் யேமன் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளதின் படி விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு 20000ஈரோ பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.