வியாழன், ஜூலை 2, 2009 18:08 | கொழும்புச் செய்தியாளர் மயூரன்
ஜே.என்.பி க்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் - வீரவன்ச கட்சியும் முற்றாகச் சரண்
சிறீலங்காவின் அமைச்சரவையில் அமைச்சர் ஆனார் இனவாதக்கட்சியான ஜேவிபியின் முன்னார் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது அதில் இருந்து பிரிந்து இயங்கிவரும் தேசிய சுதந்திர முன்னணிக்கு தாவியவருமான நந்தன குணதிலக்க.
சிறீலங்காவின் சுற்றுலாத்துறை மற்றும் அதுசார் அமைச்சுப் பொறுப்புக்களில் இவர் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னர் இவ் இமைச்சில் இருந்த மிலிந்த மொறகொட பிரதி நீதி மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மிலிந்த மொறகொட சிறிலங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுபினரும் தற்போது அரசுடன் இணைந்துள்ள ஐக்கியதேசியக் கட்சியின் ஜனநாயக குழுவில் அங்கம் வகிப்பவரும் ஆவார்.
தேசிய சுதந்திர முன்னணி சிறீலங்காவில் உள்ள இனவாதக்கட்சிகளில் பிரதானமான ஒன்று என்பதுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு யோசனைகளை எதிர்க்கும் கட்சிகளில் ஒன்றாக்கும்.
இதேபோல் பியசிறீ விஜயநாயக்கவும் அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற கலாச்சார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இவற்றுடன் சிறீலங்காவின் அமைச்சுக்கள் எண்ணிக்கை 110 இனைத் தாண்டியுள்ளது குறிப்படத்தக்கது.