மட்டக்களப்பு ஏறாவூரில் முஸ்லிம் இளைஞர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு ஏறாவூரில் முஸ்லிம் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டு முற்றத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த வேளை வீட்டு வளாகத்தினுள் நுழைந்த இனத் தெரியாத ஆயுததாரிகள்  இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்டவர் சாதாரண தொழிலாளியான 21 அகவையுடைய அகமது லெப்பை அகமது ரமீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியால் இவரது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது என சிறீலங்காக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.