Jul 2, 2009
/
பகுதி: செய்தி
/
முஸ்லீம் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க அவகாசம் நீடிப்பு
தென் தமிழீழத்தில் உள்ள முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை ஒப்படைக்கும் இறுதி நாளை சிறீலங்கா படையினர் ஒத்தி வைத்துள்ளனர்.
18 முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் அங்கு இயங்கி வருவதாக, தகவல் வெளியாகி இருந்த நிலையில், எந்தவொரு குழுவும் தமது ஆயுதங்களை ஒப்படைக்க முன்வரவில்லை.
இதனையடுத்து, ஆயுத ஒப்படைப்புக்கான கால எல்லையை ஜூலை இரண்டில் இருந்து, ஜூலை நான்காக நீடிப்பதாக, சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் குணசேகர அறிவித்துள்ளார்.