கறுப்பு மனிதர்களின் வெள்ளை வரிகள்

சந்ததி காக்க கந்தகம் சுமந்த
கரும்புலி வீரர்களே!

 

எம் நெஞ்சறைக்குள்
பதிவாகிய வெடிகுண்டுப் புனிதர்களே!

 

உங்கள் நெஞ்சுரம் கண்டு
எம்மினம் தலைநிமிர்ந்த போதும்
உங்கள் தோழர்கள்
எங்கள்

நெஞ்சீரம்
கொஞ்சமாய்க் கசிந்தது.

 

இறுதி நாள் பயணத்தில்
நீங்கள்

இறுதியாய்
உதிர்த்துச் சென்ற
அந்த அழகிய புன்னகையை
இன்று கூட
எங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள்
பத்திரமாய் வைத்திருக்கின்றோம்.

 

நீங்கள்

எங்கள் இதயங்களுக்குள்
விதைத்தவற்றைச் சுமந்த படியே
உங்கள் புனிதப்
பாதங்கள்
பயணித்த பாதை வழியே
பயணிக்கின்றோம்.


நாளை எமக்கான
இலக்கு வரும்
நாமும் வெடித்துச் சிதறுவோம்
அந்த ஒளிப்பிழம்பில்
ஒளிர்வாள் தமிழீழத் தாய்.

 

 

கல்லடி றொபட்.(நெருப்புப் பூக்கள்.)