காய்ச்சல் காய்ச்சல் காய்ச்சல் -குருபரன் கிருஸ்ணபிள்ளை

இன்புளுவென்சா A (H1N1) திடீர் பரவுகை பற்றிய அறிவுறுத்தலும் பாதுகாப்பிற்காக கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும்

பிரதானமாக சுவாசப்பாதை திரவங்கள் மூலம், தும்மும் போதும் இருமும் போதும் மற்றும் பேசும் போதும் ஓருவரிலிருந்து இன்னொருவருக்கு இந்நோய் பரவுகிறது.

இந்நோய்குரிய அறிகுறிகளை, காய்ச்சல், தும்மல், இருமல், நடுக்கம் மற்றும் உடல் வலி போன்றவற்றை கொண்டுள்ள ஒருவருடன் நெருக்கமாக (ஏறத்தாழ 1m) உள்ள ஒருவர் இவ்வாறு தொற்றுக்குள்ளாகும் மிக்கூடிய ஆபத்தை கொண்டுள்ளார்.

முகமூடி அணிவதன் மூலம், பிரதானமாக அந்நோய் அறிகுறியுடையவருடன் நெருக்கமாக உள்ளவர்கள் தொற்றுக்குள்ளாவதை குறைக்க முடியும். மேலும் நோயறிகுறி உடையவர் தனது வாய் மற்றும் மூக்கினை மறைப்பதன் மூலம் சுவாசபாதை திரவங்கள் பரவுவதை தவிர்க்கலாம்

ஆயினும் முகமூடியினை சரிவர பயன்படுத்துதல் மிகஅவசியமாகும். தவறான முறையினால் பரவுதலை மேலும் அதிகரிக்க நேரிடலாம்


பொதுவான அறிவுறுத்தல்கள்

சமூகத்திலே இந்நோய் பரவுவதை தடுப்பதற்கு, முகமூடி அணிவதை விட சில பொதுவான நடவடிக்கைகள் அவசியமாகின்றன.

சுகதேகிகளுக்குரிய அறிவுறுத்தல்கள்
நோயறிகுறியுடையவரிலிருந்து விலகி இருத்தல். (ஏறத்தாழ 1m)
அவரின் வாய் மற்றும் மூக்குப்பகுதிகளில் தொடுகையை தவிர்த்தல்

கைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல். முக்கியமாக நோயறிகுறியுடையவரின் வாய், மூக்குப்பகுதிகளில் தொடுகை ஏற்பட்ட பின்னர் மற்றும் தொற்றுக்குட்பட்ட மேற்பரப்புகளில் தொடுகை ஏற்படும் பொழுது
நோயாளியுடன் நெருக்கமாக இருக்கும் நேரத்தினை இயலுமானவரை குறைத்து கொள்வதன் மூலம்

சன நெருக்கமான இடங்களை இயலுமானவரை தவிர்ப்பதன் மூலம்
யன்னல்களை திறந்து வைத்து வீட்டினுள் காற்றோட்டத்தினை அதிகரிப்பதன் மூலம்

நோயறிகுறியுடையவர்களுக்குரிய அறிவுறுத்தல்கள்
வெளியே உலவுவதை தவிர்த்து வைத்தியரின் ஆலோசனைக்கிணங்க நடத்தல்
சுகதேகியான மற்றையவர்களிலிருந்து விலகி இருத்தல்.( ஏறத்தாழ 1m)

தும்மும் போதும் இருமும் போதும் திரவங்கள் வெளியேறாது தடுப்பதற்கு வாய் மற்றும் முக்கினை தகுந்த முறையில் மூடிக்கொள்ளல்.

இவ்வாறு பயன்படுத்துபவற்றை தகுந்த முறையில் சுத்தம் செய்தல் அல்லது பாதுகாப்பான முறையில் அழித்தல். மற்றும் இவ்வாறு தொடுகைக்குட்பட்ட பின்னர் கைகளை சவர்க்காரம் கொண்டு சுத்தம் செய்தல்.

யன்னல்களை திறந்து வைத்து வீட்டினுள் காற்றோட்டத்தினை அதிகரிப்பதன் மூலம்
முகமூடியினை பயன்படுத்தும் போது அதன் பயனை பெறுவதற்கும் அதன் தவறான பிரயோகம் மூலம் மேலும் பரவுவதை தவிர்ப்பதற்கும் அதனை சரியான முறையிலே அணிவதும் பின்னர் சுத்தம் செய்வதும் மிக அவசியமாகும்.

எனவே முகமூடியினை அணியும் போது

வாய் மற்றும் மூக்கினை முற்றாக மூடுவதுடன் முகமூடிக்கும் முகத்திற்குமிடையில் இடைவெளி இன்றி இருத்தல் வேண்டும்

முகமூடியை அணிந்திருக்கும்போது அதனை அடிக்கடி தொடுவதை தவிர்த்தல் மற்றும் ஒவ்வொரு தொடுகையின் பின்னரும் கைகளை சவர்க்காரம் கொண்டு கழுவுதல் அவசியம்

முகமூடி ஈரலிப்பான உடனே சுத்தமான உலர்ந்த புதிய முகமூடியினை மாற்ற வேண்டும்
ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தவென உருவாக்கப்பட்ட முகமூடியினை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது

நன்றி
உலக சுகாதார ஸ்தாபனம்