விம்பிள்டன் டெனிஸ் கால் இறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் அனா இனோவிச் நான்காவது சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.

 

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் செர்பியாவின் அனா இனோவிச் அவர்களுக்கு காலில் ஏற்பட்ட வலியின் காரணமாக அவர் ஆட்டத்தை இடையில் நிறுத்திக் கொண்டதால் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அவர்கள் 6-1,1-0 என்ற அடிப்படையில் தெரிவாகியுள்ளார்.

 

செர்பியாவின் அனா இனோவிச் அவர்கள் உலக டெனிஸ் வீராங்கனைகளில் 13வது இடத்தில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.