About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
" எதிர்காலத்தை நமக்கு எவரும் தடை செய்ய இயலாது " - லியோன் கம்பெட்டா
Jun 28, 2009 / பகுதி: சிறப்புச் செய்தி /

தமிழனத்தைக் காக்க ஒன்றுபடுங்கள் - தமிழ்நாடு மக்களை நோக்கி சீமான் அறைகூவல்

தமிழனத்தைக் காக்க தமிழ்நாடு தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் அறைகூவல் விடுத்துள்ளார்.

 

ஈழத் தமிழர்கள் அழிவதற்கு தமிழ்நாட்டில் தமிழனாக இல்லாமல் இருப்பதுதான் காரணம் என்றும் தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குநருமான சீமான் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத் தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.

இப்பேரணி சென்னை மன்றோ சிலையில் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை புறப்பட்டது. பேரணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நிர்மலா ராசா தலைமை தாங்கினார்.

திரைப்பட இயக்குநர் சீமான் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியின் முன்னதாக மகளிர் அணியினர் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.

பேரணியினை தொடக்கி வைத்து சீமான் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச போர்க் குற்றம் செய்து இருக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்போகும் போது அந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் பொருட்டு இந்தியா கையெழுத்திட்டதே, இதனை விட இலங்கை தமிழர்களுக்கு என்ன துரோகம் செய்யப்போகிறார்கள். இதை கேட்டால் நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள்.

இலங்கையில் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம் தமிழன் இந்த மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான். தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. இனியாவது எனது தாய் தமிழ் உறவுகள் எல்லாம் தமிழன் என்ற ஒற்றை குடையின் கீழ் அணிதிரளாது போனால், இந்த இனத்தை காக்க யாராலும் முடியாது. மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு நம் இனம் காக்க போராட வேண்டும் என்றார் அவர்.


 

 

 

Banner

எதிர்வரும் நிகழ்வுகள்



சிறப்புச் செய்திகள்

Jul 28, 2010

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா? அல்லது எதிராகச் செயல்படுகிறதா? என்பதை ஆராயவேண்டியுள்ளது. பெரியார், அண்ணா வழியில் வந்ததாக கூறிக்கொள்ளும்
Jul 28, 2010

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்…

Jul 26, 2010

தமிழ் மக்கள் தமது இனத்தின் விடுதலைக்காகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளை விடுவிக்கவும் மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்கள் மேற்கொள்ள வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய

Jul 23, 2010

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Jul 21, 2010

பரந்தளவிலான நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் முன்னேற்றுவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய





Guranteed Pass