பிரபல பொப் பாடகரை இழந்து தவிக்கும் இசையுலகம்

மைக்கேல் ஜாக்சன் அவர்களின் மறைவை அடுத்து பிரான்சின் பிரபல பாடகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

சிறந்த ஒரு பாடகரையும் புதுமைகள் நிறைந்த மனிதரையும் கலையுலகமக்கள் இழந்து நிற்கிறனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் மைக்கேல் ஜாக்சன் அவர்களுடைய இணையத்தளத்தில் "நாங்கள் உங்களை எந்நாளும் விரும்புகிறோம்" என்ற வாக்கியத்தை அனுப்புயுள்ளனர்.

 

மைக்கேல் ஜாக்சன் மறைவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இசை உலகின் பிதாமகன் மைக்கேல் ஜாக்சனின் மறைவு என்னை மிகவும் பாதித்துள்ளது. உலகின் மிகச்சிறந்த இசை ஜாம்பவான் ஜாக்சன் இசை உலகில் பல புதுமைகளைப் புகுத்தியவர்.   அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ரஹ்மான் கூறியுள்ளார்.

 

இதே நேரம் தென் இந்திய திரை உலகத்தினரும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.