ஜெனிவா ஐ.நாவுக்கு முன்பாக நடைபெறவுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் எமது உறவுகள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு எமது ஒற்றுமையையும் பலத்தையும் சர்வதேசத்திற்குக் காட்ட வேண்டும். எமது இனத்திற்கு எதிராக முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேசத்திற்கு மீண்டும் உணர்த்தும் சந்தர்ப்பமாக இந்த பொங்குதமிழ் அமைந்துள்ளது.
எனவே ஐ.நாவில் ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்வதுடன் இனப்படுகொலைக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்க வேண்டும் என்பதை இந்த பொங்குதமிழில் மக்கள் பொங்கி எழுந்து உலகுக்கு உணர்த்த வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.