About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 17, 2012

மணலாற்றில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின்

மணலாற்றில் காவியமான சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், வவுனியாவில் காவியமான வீரவேங்கை கபில்ராஜ் என்ற மாவீரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மணலாற்றில் சிறிலங்கா படைகளால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட “மின்னல்” படை நடவடிக்கைக்கு எதிராக 17.09.1991 அன்று மேற்கொள்ளப்பட்ட முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவினர்.

அவர்களின் விபரம் வருமாறு

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி
லெப்.கேணல் ஜஸ்ரின்
(பொன்னுச்சாமி பாஸ்கரன் - தையிட்டி, யாழ்ப்பாணம்)

 2ம் லெப்டினன்ட் மில்ராஜ்
(வைரமுத்து விஜேந்திரன் - கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை)

 வீரவேங்கை அறிவழகன்
(சுப்பிரமணியம் வேலாயுதம் - கிளிநொச்சி)

 வீரவேங்கை லோறன்ஸ்
(முருகேசப்பிள்ளை தபேந்திரன் - புத்தூர், யாழ்ப்பாணம்)

 வீரவேங்கை சுரேன்

(சந்திரசேகர் சுரேஸ்குமார் - சுண்ணாகம், யாழ்ப்பாணம்)

 வீரவேங்கை குகநேசன்

(ஆறுமுகம் ராசன் - சித்தாண்டி, மட்டக்களப்பு)

இம் மாவீரர்களினதும் இதே நாள் வவுனியா செட்டிப்புல பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவிய

 வீரவேங்கை கபில்ராஜ்
(இராமசாமி ஜோன்யேக்கப்ஜஸ்ரின் - பாவற்குளம், வவுனியா)

என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்