About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

எமது நிலம் எமக்கு வேண்டும் - மாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்...

Sep 14, 2012
எமது நிலம் எமக்கு வேண்டும் - மாந்தநேயப் பயணம் தொடர்கிறது மிதிவண்டியில்...

எமது நிலம் எமக்கு வேண்டும் என ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் வகையில் இன்று மாலை சுவிஸ் நாட்டில் வசித்துவரும் ஈழத்தமிழரான செல்வராசா வைகுந்தன் அவர்கள் ஸ்ராஸ்புர்க் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்றலில் இருந்து தனது நீதி வேண்டிய மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்தார் .

அகவணக்கத்துடன் தொடங்கிய இவ் நிகழ்வு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ உறுதியோடு ஆரம்பிக்கப்பட்டது .



செல்வராசா வைகுந்தன் அவர்களின் நீதி வேண்டிய மிதிவண்டி பயணத்தை ஆரம்பித்து வைக்க எழுச்சி கொண்ட ஸ்ட்ராஸ்புர்க் மக்கள் தமது ஆதரவை செலுத்தியதோடு மற்றும் வைகுந்தன் அவர்களுடன் இணைந்து ஏனைய மூன்று இளையோர்களும்  ஆரம்பித்தனர் .



ஸ்ரார்ஸ்புர்க் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிதிவண்டிப்பயணம் Marckolsheim எனும் இடத்தைச் சென்றடைந்தது. நாளை காலை மீண்டும் தொடர்கின்ற மிதிவண்டிப்பயணம் Mulhouse நகரத்தைக் கடந்து மாலை Basel நகரத்தைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது .

Basel நகரத்தில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் மக்கள் சந்திப்பும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. .

எமது நிலம் எமக்கு வேண்டும் என 22 .09 .2012 ஓங்கிக் குரல் கொடுக்க அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களும் சிறப்பாக சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வுக்கு அணிதிரள வேண்டும் என திரு வைகுந்தன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் .







 
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

078 662 93 06

076 410 06 76

076 421 13 99

சிறப்புச் செய்திகள்

Jun 19, 2013

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச ஊடக ஒழுங்குமுறையானது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள்....
Jun 19, 2013

முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்தியாவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான வெளிவிகார செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர்,......
Jun 19, 2013

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா............

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்