About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 13, 2012

அவுஸ்திரேலியா பயணித்த மேலும் 86 பேர் சிலாபம் கடற்பரப்பில் இன்று கைது!

சட்ட விரோதமான முறையில் இரண்டு படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க முயற்சித்த 86  பேர் சிலாபம் கடற்பரப்பில் வைத்து இன்று கடற்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு படகில் 58 தமிழர்களும் 9 சிங்களவர்களுமாக 67 பேரும் மற்றுமொரு படகில் 14 தமிழர்களும் 5 சிங்களவர்களுமாக 19 பேரும் தம்மால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களுள் இரண்டு பெண்களும், ஐந்து சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். எனவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா,  கிளிநொச்சி, சிலாபம், மன்னார், நீர்கொழும்பு மற்றும் ஆனமடுவ ஆகிய  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டோர் கடற்படையினரால் மோதர துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்புச் செய்திகள்

May 20, 2013

பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள்....
May 19, 2013

மே 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு...
May 19, 2013

முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில்....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்