About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Sep 5, 2012

மதுரையில் தனியார் உணவு விடுதி ஒன்றில் பணிபுரியும் சிங்களவர்களை வெளியேறக்கோரி ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!

மதுரையில் தனியார் உணவு விடுதி  ஒன்றில் பணிபுரியும் சிங்களவர்களை வெளியெறக்கோரி ம.தி.மு.க. வினரின் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மதுரை கோச்சடை பகுதியில் பிரபல தனியார் உணவு விடுதி  உள்ளது. இந்த உணவு விடுதியில் இலங்கையை சேர்ந்த ஸ்ரீநித் டிசில்வா பொதுமேலாளராகவும், தலைமை சமையலராக முரைஷ் என்பவர் உட்பட 16 பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர்களை உடனடியாக இலங்கைக்கு அனுப்பக்கோரி 15 பேர் இன்று காலை அந்த உணவு விடுதியை முற்றுகையிட்டனர்.  அப்போது  மகிந்தாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் 15 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்த அந்த உணவு விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று சிங்களர்களுக்கு எதிராக நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கை யாத்திரிகர்கள் 184 பேர் தமிழ்நாடு பூண்டி மாதா ஆலயத்திற்குச் சென்றிருந்த நிலையில் அவர்களையும் முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை தெரிந்ததே.

இதனைத் தொடர்ந்து அவர்கள் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை இலங்கை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்