இந்தியஅரசு சிங்கள சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுப்பதை எதிர்த்து 01.09.2012 இன்று காலை 10.00 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடையாள உண்ணாவிரதமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைப் பெற்றது. இவ் நிகழ்வினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரும் மேல் சபை உறுப்பினரும் ஆன திரு டி.ராஜா அவர்கள் தலைமையில் தலைமையேற்றார்.
இவ் உண்ணாவிரதத்தில் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் திரு நல்லகண்ணு , மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் , துனைச் செயலாளர் திரு சி.மகேந்திரன் உட்பட கட்சியின் தமிழக சட்டசபை உறுப்பினர்களும் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பேராசிரியர் தீரன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்ந்த புலவர் கி.தா.பச்சையப்பன் ,தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேல், ஊடகவியலாளர் டி.எஸ்.மணி உட்பட பல தமிழ் தேசிய உணர்வாளர்களும் இவ் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய அரசு தமிழினத்திற்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும், ஈழத்தமிழர் செந்தூரன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த்தை கண்டித்தும் கண்டன உரையாற்றினார்கள்.