About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

நல்லூர் திருவிழாவில் பொலிசார் கலகம், இளைஞர்கள் மீதும் தாக்குதல்

Aug 16, 2012
யாழ். நல்லூர் முருகன் கோயில் திருவிழாவில் பாதுகாப்புக் கடமையிலிருந்த பொலிசார் ஒருவர் வாகனச் சாரதியை தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து திருவிழாவிற்கு சென்ற மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கந்தர்மடம் சந்தியில் 'வடி' ரக வாகனம் ஒன்றை மறித்த பொலிசார் ஒருவர், அவ் வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியை தாக்கியுள்ளார். அத்துடன் குறித்த சாரதி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியும் பொலிசாரினால் அறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
இன்று மதியம் 2.00 மணியளவில் நல்லூர் கோவிலிலிருந்து கந்தர்மடம் சந்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த 'வடி' ரக வாகனம் ஒன்றை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் ஒருவர் மறித்துள்ளார். வாகனத்தை சாரதி நிறுத்த முற்பட்டபோதும், அங்கு காணப்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக சாரதி ஒதுக்குப் புறமாக நிறுத்தியுள்ளார்.

தான் மறித்தவுடன் வாகனத்தை நிறுத்தவில்லை என்ற காரணத்தால் கோபமடைந்த பொலிஸ், விரைந்து சென்று சாரதியை தாக்கியுள்ளார். இதனால் சாரதியின் தலையில் காயமடைந்து இரத்தம் வழிந்துள்ளது. அத்துடன் சாரதியின் சங்கிலியையும் அறுத்துள்ளார்.

அதன்பின்னர் குறித்த பொலிஸ், வாகனத்தையும் சாரதியையும் அழைத்துக் கொண்டு பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள பொலிஸாரிடம் வந்துள்ளார். அங்கு நின்ற பொதுமக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு நின்ற பொலிசாரும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசை வேறிடத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அவரை கொண்டுவருமாறு அங்கு நின்ற மக்கள் பொலிசாருடன் ஆரவரித்தனர். ஆனால் பொலிசார் அவரை அவ்விடத்திற்கு அழைத்து வரவில்லை. இதனால் மக்கள் மேலும் கொதிப்படைந்தனர். சுமார் ஒரு மணிநேரம் வரை மக்கள் குழுமி நின்று பொலிசாரிடம் தொடர்ந்தும் வாதிட்டுள்ளனர்.

சிறப்புச் செய்திகள்

Jun 19, 2013

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச ஊடக ஒழுங்குமுறையானது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள்....
Jun 19, 2013

முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்தியாவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான வெளிவிகார செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர்,......
Jun 19, 2013

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா............

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்