About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 14, 2012

செஞ்சோலை படுகொலையின் 6ம் ஆண்டு நீங்காத நினைவில் ...- யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில்  இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத பதிவாகிவட்ட இந்தச் சம்பவம் நடந்து இன்று 6 ஆண்டுகள் ஆகிவிட்டது.


ஈழத்தமிழினத்தை இனவழிப்பு செய்துகொண்டிருக்கும் சிங்கள அரசின் இவ்வாறான கொடூர போர்குற்ற செயல்களை தொடர்ச்சியாக நாம் வெளிக்கொண்டு எமது தமிழீழம் நோக்கிய பாதையில் இப்படியான எம் செஞ்சோலைக் குஞ்சுகளின் நீங்காத நிவுகளை மீண்டும் மீண்டும் பதிவுசெய்வோம் .

இவ்வாறான, நிகழ்வுகளை தொடர்ந்து செய்வதனால் மாவீரர்களின் தியாகங்களும், மக்களின் அழிவுகளும் மறக்கப்படாது நினைவூட்டப்படுவதோடு, இதன்மூலம் எழுச்சியை தொடர்ந்து எம் மக்கள் மத்தியில் தக்க வைத்து நம்பிக்கையோடு  எமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும்.
இதுபோன்ற நினைவு நிகழ்வுகளில் அதிகளவான மக்கள் பங்குபற்றுவதோடு, அவர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் உணர்ந்து அந்த தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் வீண்போகாத அளவுக்கு நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும்.

 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி  அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 62 செல்வங்களின் நினைவுநாளான இன்று நாம் தலைசாய்த்து அகவணக்கம் செலுத்தும் அதே நேரம் அங்கு செஞ்சோலையில் எவ்வாறு சிறுவர்கள் பராமரிக்கப்பட்டார்களோ அதே போன்று இன்று அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் முகாம்களிலும், மீள்குடியேற்றப் பகுதிகளிலும் உள்ள சிறுவர்களை பராமரித்து அவர்களுக்கான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்வதையே நாம் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

செஞ்சோலை சிறுவர்களை நினைவு கூரி எதிர்வரும்

 வெள்ளிகிழமை 17.08.2012         17 :30 மணிக்கும்
 ஞாயிற்றுக்கிழமை 19.08.2012  11 மணிக்கும்      


 மலர் - மற்றும் சுடர்வணக்கம் செலுத்தப்படும் . நிகழ்ச்சி நடைபெறும் முகவரி : Bundesallee 160 ,10715 Berlin

நன்றி
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்