லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது சர்வதேசத்தின் கவனம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. இது ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு நடாத்தும் இனவழிப்பு நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பான சூழலை எமக்கு தந்திருக்கிறது. இந்நிலையில் சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை பன்னாட்டுத் தலைவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொது மக்கள் என பரந்துபட்ட மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவது மிகவும் அவசியமான பணியாக அமைந்துள்ளது. 
யூலை 22ம் திகதி நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுப் பேரணியிலிருந்து இன்று வரை பல கவனயீர்ப்புப் போராட்டங்களை மக்களின் ஆதரவுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடாத்தி வருகிறது. இதனொரு அங்கமாக, திரு. சிவந்தன் கோபி அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்தி வருகிறார். யூலை 22ம் திகதி உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கிய அவர் தொடர்ந்து உறுதியுடன் தனது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.
• இனப்படுகொலைபுரியும் சிறிலங்கா அரசாங்கத்தின் உறுப்பினர்களை ஒலிம்பிக் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம்
• இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
• தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும், நிலப்பறிப்பு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
• சிறிலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியற் கைதிகளான போராளிகளை விடுதலை செய்யவேண்டும்.
• மேற்கு நாடுகளில் அகதித் தஞ்சம் கோருபவர்களை திருப்பி அனுப்புவது நிறுத்தப்படவேண்டும்
ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அவர் நடாத்திவரும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கிவருவதுடன் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமையை மைய ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இப்போராட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கி அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் நியாயத்தன்மையை வெளிப்படுத்த வேண்டியது அனைத்துத் தமிழ் மக்களின் கடமையாகிறது.
ஓலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான ஒகஸ்ட் 12ம் நாள் திரு. சிவந்தன் தனது போராட்டத்தினை நிறைவு செய்யவுள்ளார். அன்றைய தினம் ஆரம்ப நாள் நிகழ்ச்சிகள் போன்றே ஒலிம்பிக் திடலில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தப்படவுள்ளதுடன் அதனைப் பார்வையிட பன்னாட்டுத் தலைவர்களும், பிரமுகர்களும் வருகை தரவுள்ளனர். அன்றைய தினம் எமது கவனயீர்ப்புப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.
ஓகஸ்ட் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து திரு. சிவந்தன் அமர்ந்துள்ள ஸ்ரற்போர்ட் இலகு தொடருந்து நிலைய அருகாமையில் (ளுவசயவகழசன ர்iபா ளுவசநநவ னுடுசு டுழனெழn நு15 2ளுP) கூடுவோம். மாலை 5.30 மணிக்கு உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்வதுடன், ஆரம்ப நாள் நிகழ்ச்சியின்போது கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில் (யுளிநn றுயல டுழனெழn நு14 5ளுவு டீடைடiபௌபயவந மீன் அங்காடிக்கு எதிரில்) மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இறுதி நாள் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து பேருந்துகள் மூலமும் வாகனங்கள் மூலமும் வருவதற்கான ஏற்பாடுகள் அந்தந்த நாடுகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன.
இப்போராட்டத்தினை வெற்றிப்பெறச் செய்யவதற்காக மக்களை பெருமளவில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு அழைப்பு விடுக்கிறோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா