கனடா, டொரன்டோ நகரில் கனடாவின் QEW தேசிய நெடுஞ்சாலை 427ல் கடந்த ஞாயிறு அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறிலங்காவைச் சிங்கள தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜயந்த விஜேரத்ன (49), எலீஸா விஜேரத்ன (19) ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
இடம்பெற்ற வாகன விபத்தில்சிறிலங்காவை பிறப்பிடமாகக் கொண்ட தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
காரில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இறந்த பெண்ணின் தாயார் என கருதப்படும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, சன்னிபுரூக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்திற்கு காரணமாக எதிரே வந்த வாகன சாரதி கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.