About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

யாழ் ஊரெழுவில் கோடாரியினால் வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Aug 6, 2012
யாழ்ப்பாணம், ஊரெழு பொக்கணைப் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கோடாரியினால் வெட்டப்பட்டு இறந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சடலமாக மீட்கப்பட்டவர் கிளிசொச்சி,இராமநாதபுரம்,புதுக்காட்டைச் சேர்ந்த முருகேசு சிவராசா (வயது 45) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான முறைப்பாடு இன்று திங்கட்கிழமை அதிகாலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறந்தவரின் சடலத்துக்கு அருகில் காணப்பட்ட  கோடரி ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
யாழ்ப்பாணத்தில் தொழில் நிமித்தம்  உறவினர் வீட்டில் தங்கியிருந்த இவர் பொக்கணைப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில்  நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்ததாகவும் பின்னர் இடையிவ் அவரைக் காணவில்லை என்றும், நிகழ்வு முடிந்து வீடு திரும்பும் போது குறித்த நபரின் உறவினர் வீட்டில்  தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் தீயை அணைத்துவிட்டு பார்த்தபோது அவர் கோடரியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட  யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
 
கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்புச் செய்திகள்

Jun 19, 2013

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச ஊடக ஒழுங்குமுறையானது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச மனித உரிமைகள்....
Jun 19, 2013

முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இந்தியாவின் தெற்காசியாவுக்கு பொறுப்பான வெளிவிகார செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர்,......
Jun 19, 2013

தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா............

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்