About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 5, 2012

ஐ. நா. குழுவிற்கு மஹிந்த அனுமதி: கொழும்பு வருகின்றது மூவர் அணி

ஜெனிவாத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்காகஐ. நா. குழு கொழும்பு வருகை தரவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த மூவர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பர்.

நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்து வதற்கான 'நடவடிக்கைத் திட்டம்' அரசால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய நகர்வாக ஐ.நா. குழு கொழும்பு வருவதற்கான அனுமதி அரசால் வழங்கப்பட்டுள்ளது.

ஜெனிவாத் தீர்மானத்தில் கூறப்பட்ட மூன்று விடயங்களையும் செயற்படுத்துவதில் இலங்கை அரசுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இந்தக் குழுவினர் வழங்குவர்.

கடந்த மார்ச் மாதம் ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்தக் குழு இலங்கை வருவதற்கான அனுமதியை அரசு இதுவரை மறுத்து வந்தது. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமைக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கும் அரசு எவ்வாறு பதிலளிக்கப்போகிறது என்பதைத் தெளிவுபடுத்துமாறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்துப் போகிறது என்பதை வெளிப்படுத்துமாறும் இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அலுவலகம் வழங்கும் ஆலோசனைகள் உதவிகளை இலங்கை அரசு பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஜெனிவா தீர்மானம் வலியுறுத்தி இருந்தது.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்