About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 5, 2012

மட்டக்களப்பு உன்னிச்சைகுளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சைகுளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் 5.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காந்தி கிராமம் சின்ன ஊறணியைச் சேர்ந்த கலாவள்ளி பிரதீபன்(24வயது),அம்மன் கோவில் வீதி,இருதயபுரத்தை சேர்ந்த ஜி.பிரியதர்ஷன் (27வயது) ஆகியோரே உயிரிழந்ததாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும் நண்பர்கள் எனவும் உல்லாசமாக சென்று குளித்துக்கொண்டிருந்தபோது சுழியில் சிக்கி உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலங்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்....
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்