About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 4, 2012

தியாக தீபம் பார்த்தீபனும் மனிதநேயன் கோபி சிவந்தனும்

அன்று..!!

நல்லூர் வீதியிலே அமைக்கப்பட்ட உண்ணாவிரத மேடை நடுவில் வைக்கப்பட்டிருந்த கதிரையில் சரியாக காலை 9.45 மணிக்கு வந்து அமர்கின்றார் திலீபன் அண்ணா. அத்தோடு சூடுபிடிக்கின்றது உண்ணாவிரதக் களம். அருகே மேடைகள் முழைக்கின்றன.

அவ்வாறு அருகே அடைக்கப்பட்ட ஒரு மேடையில் திரு.நடேசன் அண்ணாவும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஐய்யாவும் எதற்காக திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது என்பதனை கூடியிருக்கும் மக்களிற்கு தெளிவுபடுத்திக் கொண்டு இருந்தனர்…

தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை நிலைநிறுத்தும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் முன்வைக்கப்பட்ட 5 அம்ச கோரிக்கைகள்…

1 – பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

2 – புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3 – இடைக்கால அரசு நிறுவப்படும் வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4 – வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காவல்துறை நிலையங்கள் திறக்கப்படுவதுஉடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5 – இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல்படை என அழைக்கப்படுவோரிற்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

இந்த ஐந்து நிபந்தனைகளும் மேடையில் வாசித்து காண்பிக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை 13-09-1987 அன்று இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி 24மணித்தியால அவகாசமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 15-09-1987 வரை எந்தவிதப் பதிலும் தூதுவரிடம் இருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் மறியல் போராட்டம் நடாத்துவது என தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மாணிக்கப்பட்டது.
அதன்படியே தலீபன் அண்ணாவின் தியாகப் பயணம் ஆரம்பித்தது…!!

இன்று..!!

பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 வரையிலான காலபகுதியில் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யபட்டு 22.07.2012 அன்று STRATFORD DLR STATION தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில் ஒழுங்கு செய்யபெற்ற இடத்தில் சரியாக மாலை 8:10 மணிக்கு கதிரையில் அமர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தினை தொடங்கினார் மனிதேயன் திரு. கோபி சிவன்தான் அவர்கள்

மனிதநேயன் திரு. கோவி சிவந்தனின் கோரிக்கைகள் :

1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும்

2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரனை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். இதில் தமிழீழ மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் தமிழனவழிப்பு நடவடிக்கை என்பன உள்ளடக்கப்படல் வேண்டும்.

3. தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நிலஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும். அவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட்டு அனைத்துலக அபய நிறுவனங்கள் அவர்களை தொடர்ச்சியாக சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்.

5. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.

கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து எமது மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையை அனைத்துலக மட்டத்தில் எடுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தில் எம்மக்கள் அனைவரையும் திரண்டு வந்து ஆதரவு நல்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்