
தொழில்நுட்ப உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும்
அப்பிள் ஐ போன் 5 அடுத்தமாதம் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென நம்பத்தகுந்த
வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
அதன் முன்னைய வெளியீடான ஐ போன் 4
மற்றும் 4s ஆகியன ஒரே மாதிரியான தோற்றத்தினைக் கொண்டிருந்தன.
ஆனால் ஐ போன்
5 ஆனது சற்று வித்தியாசமான தோற்றத்தினையும், பெரிய திரையையும் , நவீன தொழில்நுட்ப
வசதிகள் பலவற்றையும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் கெலக்ஸி S 3 விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது.
இதனால் அப்பிள் தனது சந்தையைக் கொஞசம் கொஞ்சமாக இழக்கும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது.
எனவே கெலக்ஸி S 3 க்கு போட்டியாக ஐ போன் 5 வை உடனே
வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. __