About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Aug 1, 2012

வடக்கில் வாகன புகை பரிசோதனை நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை!

வட மாகாணத்தில் வாகன புகை பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த நிலைமையினால், வட மாகாணத்தில் வாகன புகை பரிசோதனை மேற்கொள்வதற்கு முடியாமல் போனதாக மோட்டார் வாகன ஆணையாளர் எஸ்.எச்.ஹரஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

வாகன புகை பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நிலையங்களை ஸ்தாபிப்பதற்கான இடங்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார்.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 318 வாகன புகை பரிசோதனை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.