About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, போர்க்குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை கடந்த மே 16ந்தேதி தொடங்கி தீவிர கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது.

பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் இதுக்குறித்த பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியும் வருகிறது.

அதன்படி,

2-8-2012 அன்று திருநெல்வேலியில் பொதுக்கூட்டம்
4-8-2012 அன்று தஞ்சாவூரில் கருத்தரங்கம்
6-8-2012 அன்று விழுப்புரத்தில் கருத்தரங்கம்
7-8-2012 அன்று சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.