About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 30, 2012

யாழ் அரியாலை காந்தி சிலை சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் கைது!

 யாழ் அரியாலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அரியாலை காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குறித்த சிலை நேற்று முன்தினம் இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பதிவான தகவல்களுக்கு அமைய அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்