கொழும்பு மாநகர சபையின் மாதாந்த அமர்வின் போது செங்கோல் காணாமல் போயுள்ளதால் அங்கு பதற்ற நிலை தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சபையின் இன்றைய அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் செங்கோலை எதிர்கட்சி உறுப்பினர் ஒருவரே திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.