லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கையை அனுமதிக்கூடாது, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இலண்டனில் தொடர் உண்ணாநிலை இருக்கும் சிவந்தனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே இன்று 29.7.2012 உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இவ்வார்ப்பாட்டத்தை உலத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சூரிய பிரகாசஷ், ராசா ஸ்டாலின். மற்றும் இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
பெரும் முழக்கங்களுடன் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தை ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் திரு மல்லை சத்யா தொடங்கிவைத்தார்.
ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பெரியார் திராவிடக் கழகம், தமிழக முன்னேற்றக்கழகம், உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.
இவார்ப்பாட்டத்தில், பேராசிரியர் தீரன் (தமிழக வாழ்விரிமைக் கட்சி), தோழர் தனசேகரன் (பெ.தி.க), குமாரி விஜயகுமார் (ம.திமு.க), திரு பத்மநாபன் (உலகதமிழர் பேரமைப்பு) தனியரசு (வி.சி.க) தோழர் அதியமான் (தமிழர் முன்னேற்றக்கழகம்) இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் களஞ்சியம், இயக்குநர் சந்தனக்காடு கெளதமன், ஓவியர் வீரசந்தனம், ஓவியர் மருது, ஓவியர் அரசு, விண்டிவி டி.எஸ்.மணி, உள்ளிட்டோர் கலந்து கொண்ட உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டம் தொடக்கத்தில் எழுச்சி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெருந் திரளான தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.