About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்

சாதகமான தீர்வு கிடைக்கும் வரை கடமைக்குச் சமுகமளிக்கப் போவதில்லை - பல்கலை விரிவுரையாளர்கள்

Jul 29, 2012
தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை கடமைக்குச் சமுகமளிக்கப் போவதில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
தங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவ தற்கு அரச இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்று பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் குறிப்பிட்டார்.
 
நாளை கடமைக்குத் திரும்புமாறு உயர்கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார். தங்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர் வொன்றை வழங்குவதற்காக அதுகுறித்து பேச்சு நடத்துவதற்கு அரச தரப் பிலிருந்து எவரும் முன்வர வில்லை என்றும் விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.
 
இத்தகைய நிலையில் தமது உறுப்பினர்கள் மீளக் கடமைக்குத் திரும்புவதற்கு விரும்பவில்லை என்பதுடன் குறைந்தபட்சம் தமது கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்கு அரசு தரப்பிலிருந்து முன்வர வேண்டும் என்றும் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் குறிப்பிட்டார்.
 
இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினதும் எதிர்காலம் குறித்துச் சிந்தித்து பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு நாளை கடமைகளுக்குத் திரும்புமாறு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிக்கை யொன்றின் மூலம் அனைத்துப் பேராசிரியர்கள், கலாநிதிகள் மற்றும் விரிவுரை யாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் பணிப்புறக்கணிப்பு காரணமாகப் பல்கலைக்கழகக் கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்

Jun 18, 2013

மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது இது நிரந்தரமான அரசியல்.....
Jun 17, 2013

இத்தாலி  Reggio Emilia - Castelnovo di Sotto நகரில் 15-6-2013 அன்று திலீபன் தமிழ்ச்சோலையில் தமிழ் இளையோர் அமைப்பு சொல்லுக்கு உறுதி போட்டி நிகழ்ச்சியின்...
Jun 16, 2013

தமிழ் இனம் சிங்கள தேசத்தின் அடிமை நிலையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாகவும், கௌரவமாகவும்,  வாழ்வேண்டும் என்பதனையே உயிர் மூச்சாகக் கொண்டு....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்