
வத்தளை கங்காதிலக்க விகாரைக்கு பின்புறமாக சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று மாலை வேளையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவர் இதுவரையில் அடையாளங் காணப்படவில்லை.
சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.