About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 28, 2012

பூநகரியில் பரீட்சையை இடைநிறுத்தி விளையாட்டு நிகழ்வுக்கு மாணவர்களை கொண்டுசென்ற படையினர்!

துணுக்காயில் அமைந்துள்ள 65ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுக்காக பூநகரிக் கோட்டப் பாடசாலைகளின் தவணைப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டு, மாணவர்கள் குறித்த நிகழ்வுக்காக படையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். படையினரின் இத்தகைய அத்துமீறலால் கல்விச்சமூகம் மத்தியில் பெரும் விசனம் தோன்றியுள்ளது.
 
வித்தியாலயம், முழங்காவில் ஆரம்ப பாடசாலை, இரணைதீவு ஆர்.சி.ரி.எம்.எஸ். பாடசாலை, குமுளமுனை சி.ரி.எம்.எஸ். பாடசாலை நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகிய பூநகரி வலயத்துக்குட்பட்ட 8 பாடசாலைகளிலுமேயே தவணைப்பரீட்சையை நிறுத்திவிட்டு படையினரின் விளையாட்டு நிகழ்வுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

தவணைப்பரீட்சை அட்டவணைகள் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் படையினரால் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் என்ன? என்று மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட வன்னி மாணவர்களின் கல்வித்தரத்தை இதுபோன்ற படையினரின் அத்துமீறும் செயற்பாடுகள் வீழ்ச்சிநிலைக்கே இட்டுச்செல்லும் என்று கல்விச்சமூகம் கவலை தெரிவித்துள்ளது.        

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்