About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 27, 2012

சுவரொட்டி ஒட்டியதாகக் கூறி சிவாஜிலிங்கம் உட்பட எண்மர் நெல்லியடியில் கைது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உட்பட  எண்மர் நேற்று வியாழக்கிழமை இரவு நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து சிவாஜிலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஜூலை 25 படுகொலைகளை நினைவுகூரும் வகையிலும் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி தங்கதுரை உள்ளிட்ட 53 பேரைப் படுகொலை செய்தமையை நினைவுகூரும் சுவரொட்டிகளை நேற்று வியாழக்கிழமை இரவு ஒட்டிக்கொண்டிருந்தபோதே படையினராலும் பொலிஸாரினாலும் அச்சுறுத்தப்பட்டு நாம் கைது செய்யப்பட்டோம் - என்றார். யாழ். குடாநாடு முழுவதும் வெலிக்கடை படுகொலைகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டியபோதிலும் நெல்லியடியிலேயே எம்மைக் கைது செய்துள்ளனர் என அவர் மேலும் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில்,  சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது சகாக்கள் எட்டுப் பேரும் விசாரணைக்காகவே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களைக் கைது செய்ததாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார்.

சிறப்புச் செய்திகள்

May 25, 2013

பொதுநலவாய மாநாட்டிற்கென பெருமளவு நிதியை அள்ளிக்கொட்டி இலங்கை அரசு துஸ்பிரயோகம் செய்து வருவதாக எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளன.....
May 24, 2013

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும்  சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது....
May 24, 2013

முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும்.......

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்