About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 25, 2012

அன்பான உலகத்தமிழ் மக்களே! பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களே !


23.07.2012
பொய்முகத்தைக் காட்டிக்கொண்டு உலகம் முழுதும் உலாவர முன்முனையும் சிங்களதேசத்தையும், அதன் ஆட்சியாளர்களின் உண்மை முகத்தைக்காட்டத் தொடர் சனநாயகவழியிலான போராட்டத்தைப் பிரித்தானியத் தமிழர் பேரவை ஏற்பாட்டில் ஒலிம்பிக்திடலின் முன்னால் ஈரடி சிவந்தன் அவர்கள் நடாத்திக் கொண்டிருக்கும் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்திற்குப் பிரான்சு வாழ் தமிழீழ மக்களாகிய நாம் எமது பூரண ஆதரவைத் தந்து நிற்கின்றோம்.

தமிழர்களின் வரலாற்றில் 1983 ம் ஆண்டு யூலை 23ம் திகதி ஆழப்பதிந்த வலிவடுக்கள் கொண்டதொரு நாள் . புத்தசமயத்தைப் போசித்துக் கொண்டு நரமாமிசத்தை நாளந்தம் புசிக்கும் சிங்களம் அரசியல் கைதிகளாகச் சிறையில் இருந்த விடுதலை வீரர்களான குட்டிமணி, தங்கத்துரை, nஐகன் உட்பட 52 கைதிகள் துடிக்கத் துடிக்கச் சிங்கள வெறிநாய்களால் கடித்துக்குதறப்பட்ட நாட்கள்.

• சிங்கள இனத்தையும், அதன் அரசையும் நம்பிக்காலாகாலமாய் சிங்கள தேசத்திற்குள் சிங்கள இனத்தைச் சகோதரர்களாய் எண்ணி வாழ்ந்தவர்ளை மனிதநேயம் சிறிதும் இன்றி அவர்களின் உடமைகளைப் பறித்து, சொத்துக்களைக் களவாடியும், நாசம் செய்தும் அவர்களின் உயிரைப்பறித்தும், யாழ்ப்பாணத்திற்கு உடுத்த உடுப்புகளுடன் அதுதான் உங்கள் நிலம் என்று விரட்டித்த காலம்.

• சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்றும், தனித்தே வாழ வேண்டும் அதனை உயிர் கொடுத்தே பெறவேண்டும் என்றும் பல்லாயிரம் இளைஞர், யுவதிகள் வேறு வழியின்றி ஆயுதம் எந்திப் போராட வேண்டிய வரலாறு தமிழர்களுக்கு தந்தகாலம்.

• பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணை விட்டும், தாய்நாட்டை விட்டும் உயிர் அச்சத்தால் உலகம் முழுவதும் அகதிகள் என்கின்ற பெயரையும் அந்தஸ்தையும், ஏற்படுத்தி கொடுத்த காலம்.

நேற்றுப் போல் இருந்தது ஆனால் இவை நடந்து முடிந்து 29 ஆண்டுகளாகி விட்டன. எத்தனை ஆண்டுகளானாலும் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களைத் தந்த யூலை மாதம், கறுப்பு யூலை மாதத்தில் காலாகாலமாய்த் தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கேட்டு, அன்று தொட்டு இன்று வரை சிங்களம் தொடரும் தமிழின வழிப்பு, உயிர் பறிப்பு, நிலப்பறிப்பு என்பவற்றிற்கு எதிராகத் திரு. சுகந்தன் அவர்கள் மேற்கொண்டிருக்கும் காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டத்திற்கும், அவரின் கோரிக்கை நிறைவேற பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் சார்பாகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தனது ஆதரவையும், அன்பையும் வழங்கிநிற்கின்றது. திரு. சுகந்தன் அவர்களின் அறவழியிலான சனநாயகப் போராட்டத்திற்கு மனிதநேயத்துடன் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் முக்கிய இடத்தில் அனுமதியையும், தமிழீழ மக்களுக்கும் அவர்களின் போராட்டத்திற்கும் மறைமுக அங்கீகாரத்தை வழங்கியுள்ள பிரித்தானிய நாட்டிற்கும், அதன் உள்நாட்டு, மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கும் எமது மக்களின் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை ராஐதந்திர அரசியல் நகர்வுகளைத் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தினைப் பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் நாள்தோறும் திரண்டு சென்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமாக்க வேண்டியது தலையாய வரலாற்றுக்கடமையுமாகும். அதே போலவே இவரின் கோரிக்கைகள் நிறைவேற திரளவுள்ள அனைத்து ஐரோப்பியத் தமிழ்மக்களுடன் பிரான்சு வாழ் தமிழீழ மக்களாகிய நாமும் இணைந்து கொள்கின்றோம் என்பதோடு, எமது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகம் அடையும் வரை தொடராக நடைபெறப்போகும் நீதிகேட்கும் அனைத்து அறவழி சனநாயகப் போராட்டங்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்கள் பங்கு கொண்டு முழுஅளவில் வலுச்சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

' தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ''
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு

சிறப்புச் செய்திகள்

May 22, 2013

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர்....
May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்