நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர் .
சிறப்பாக Landau நகர தமிழர் கலாச்சார விளையாட்டுக் கழகம் "கறுப்பு யூலை " இரத்தத்தில் தோய்ந்த அந்த நாட்களை நெஞ்சில் சுமந்து குருதிக்கொடை வழங்கினார்கள் .
Berlin , Mönchengladch , Saarbrücken ,Düsseldorf, Frankfurt , Landau ,Stuttgart ,Aalen ,Köln , Hamburg ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு யூலை நினைவு சுமந்த கவனயீர்ப்பு மற்றும் நிகழ்வுகளின் ஊடாக யேர்மன் மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வு வெற்றியை உணரக்கூடியதாக இருக்கின்றது .

தொடர்ந்து எதிர்வரும் 28 .07 .2012 அன்று Osnabrück , Bremen ,Göttingen நகரங்களில் கறுப்பு யூலை நினைவு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவ் நகரங்களில் வாழும் அனைத்து தமிழ்மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
அத்தோடு தமிழர்களின் நீதி வேண்டி லண்டன் மாநகரில் சகோதரன் சிவந்தன் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் அங்கு சென்று அந்த நிகழ்வை வெற்றி பெற வைப்பதோடு அந்த வீரனுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஆதரவு வழக்கும்படி வேண்டிக்கொள்கின்றோம் . கோடைக்கால விடுமுறையில் எத்தனையோ மக்கள் எப்படியோ தங்கள் சுகங்களை தேட இன்றைய நாளில் உறுதி தளராமல் வலிகளை தாங்கி நீதியின் வழிகளை தேடி பயணிக்கும் அந்த இளைஞனுக்கு எமது ஆதரவை தெரிவிக்கும் அதேவேளை அங்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்காக நாமும் அயாரது உழைப்போமாக .

