About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 24, 2012

சிறிலங்காவில் 600 ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளன ! ஜி.எஸ்.பி. சலுகை நிறுத்தத்தின் எதிரொலி .

ஐரோப்பிய யூனியனில் ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனமை காரணமாக 600 க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் சிறிலங்காவின்மூடப்பட்டமையினால் பல்லாயிரக் கணக்கானோர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதியூடாக குறித்தளிவிலான வருவாயினை சிறிலங்கா அரசாங்கம் பெற்று வரும் நிலையில் இவ்விடயம் தற்போது வெளிவந்துள்ளது.

தென்னிலங்கையினைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் இந்த ஆடைத் தொழிற்சாலைகளை நம்பியுள்ள நிலையில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமை சிறிலங்காவின் ஆடை உற்பத்தி வருவாயில் குறித்தளவிலான தாக்கத்தினை ஏற்படுத்துமென பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள தொடர்சியான நெருக்கடிய நிலை காரணமாக தேயிலை ஏற்றுமதி வருவாயில் பெரும் இழப்பினைச் சிறிலங்கா சந்தித்து வருகின்றது.

அனைத்துலக நாணய நிதியத்திடம் தொடர்சியான கடனைப் பெறவேண்டிய நிலையில் சிறிலங்காவின் பொருளதார நிலைவரம் இருந்து வரும் நிலையில் டொலருக்கான இலங்கை நாணயத்தின் பெறுமதி ஏறுநிலையில் இல்லை.

இத்தகைய சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. சலுகை வெட்டின் எதிரொலி தென்னிலங்கையில் உள்ள சிறிலங்காவின் ஆடைஉற்பத்தி மையங்களை தாக்கத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளமை சிறிலங்காவின் பொருளதாரத்திற்கு நல்லசகுனமல்ல எனத் ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்