நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது.இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக இன்றைய மாலையில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன இந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அங்சலி செலுத்தினர்.
நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி காவல்துறையினர் படையினர் மற்றும் படை புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நிமரூபனின் உடலுக்கு சுதந்திரமாக மக்கள் அங்சலி செலுத்த முடியாத சூழலில் இறுதி நிகழ்வுகள் இடம்பெறுகின்றது என்பது இங்கு குறிப்பிட தக்கது.
நிமலரூபனின் இறுதி நிகழ்வின் போது மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வார்கள் என்ற அச்சத்திலும் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ன அச்சம் காரணமாகவே பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.


