About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 23, 2012

உதவி செய்தல் என்ற பேரில் நிமலரூபனின் வீட்டில் இராணுவம்

நாளை வவுனியாவில் நடைபெறவுள்ள நிமலரூபனின் இறுதி சடங்கிற்காக அவரின் வீட்டைதுப்பரவு செய்யும் வேலையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இது மக்களைஅந்த இறுதி சடங்கில் கலந்துகொள்ளவிடாமல் செய்கின்ற ஒரு செயலாகவேபார்க்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமைநடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்குதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

'காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டறிவதற்கு குழு ஒன்றை அமைக்குமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமை கூட்ட தொடரிலும் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல்காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றது.

இந்த செயற்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. கடந்த மூன்றுவருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் மற்றும்சரணடைந்தவர்களின் பெற்றோர்கள் காணாமல் போன விடயம் தொடர்பாக பல்வேறு இடங்களில் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர்களின் விவரங்களை தெரிந்துகொண்டஇராணுவத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனவர்களின் உறவினர்களைமுல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து காணாமல் போனவர்களிற்கானமரணச்சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்திருந்தது.

அத்துடன் அங்கு வருகை தந்த 30ற்கு மேற்பட்டவர்களிடம் வெற்றுத்தாளில் கையொப்பம்பெறப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழகள் வழங்கும் அதிகாhரம் இராணுவத்தினருக்கு இல்லை. இதனை சிவில் நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும். சிவில்நிர்வாக நடவடிக்களில் இராணுவம் தலையிடுவதால் ஜனநாயகம் பாதிக்கப்பட்டு வருகின்றது.


 

   
 

சிறப்புச் செய்திகள்

May 18, 2013

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள்...
May 18, 2013

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில்....
May 17, 2013

உலகின் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ....

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்