About us |Advertise with us| Contacts
tamil news
Pathivu News
.
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " - தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன்
Jul 23, 2012

மேலும் பல சிறிலங்கா படைஅதிகாரிகள் பயிற்சிக்காக சென்னை ஊடாக இந்தியா வருகை – தமிழ்நாட்டுக்கு சவால்

சிறிலங்கா படைஅதிகாரிகளுக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இந்திய மத்திய அரசுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும், மேலும் பல சிறிலங்கா படை அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னையில் வந்திறங்கிய நான்கு சிறிலங்கா படை அதிகாரிகள் பின்னர், கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 
இவர்கள் கொல்கத்தாவில் ஏ.என்-32 விமான இயந்திரம் பொருத்தும் பயிற்சியைப் பெறவுள்ளனர். 

கொல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரில் இவர்களுக்கு நான்கு மாதகாலப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

நவம்பர் 23ம் நாள் வரை இவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 

புரொபுல் சியொன் (வயது 33 ), ஜெகத் சந்திரகுமார (வயது 25 ), சரத் சமீர (வயது 33), பின்ன கொடகே நிலந்த (வயது 28) ஆகிய சிறிலங்கா படை அதிகாரிகளே பயிற்சிக்காக கொல்கத்தா வந்துள்ளனர். 

சிறிலங்கா படையினருக்கு தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமான தளம் மற்றும் வெலிங்டன் இராணுவப் பயிற்சி நிலையம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 

இதையடுத்து இந்த இரு இடங்களிலும் பயிற்சி பெற்று வந்த சிறிலங்கா படை அதிகாரிகள் வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்குச் சவால் விடும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் நான்கு படை அதிகாரிகளை சென்னை விமான நிலையம் ஊடாக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

சிறப்புச் செய்திகள்

May 21, 2013

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
May 21, 2013

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம...
May 20, 2013

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின்...

மேலும் சிறப்புச் செய்திகள்...

எதிர்வரும் நிகழ்வுகள்

 

எதிர்வரும் நிகழ்வுகள்