”1983-இல் நடந்தது இனப்படுகொலை”தான் என - இந்திராகாந்தி கூறியதையும், 1983 முதல், 2009 மே வரை தொடர்ந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்போம். தமிழீழம் அமைய தடைகளை தகர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட சுவரொட்டியைன் , தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையின் எல்லா இடங்களிலும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயரிட்டு சுவரொட்டிகள் ஒட்டியிருந்தன.
இந்த சுவரொட்டிப் பரப்புரையை இயக்குநர் புகழேந்தி தங்கராசு ஒருங்கிணைத்தார்,யார் வேண்டுமானாலும் இந்த சுவரொட்டியைப் பயன்படுத்தலாம். . சுவரொட்டிகீழே உள்ள கருப்பு நிற பெட்டியில் தங்களது அமைப்பின் பெயரை எழுதிக்கொள்ளலாம் , மற்றும் இணையத்திலும் பயன்படுத்தலாம். தமிழர்கள் அனைவரும் கட்டாயம் நினைவு கூறும் நாள் இந்த கருப்பு ஜூலை. 23 ஒரே விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த சுவரொட்டியை. பல்வேறு அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயரிட்டு ஒட்டியது.
ம.தி.மு.க. தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழர் முன்னேற்றக்கழகம், உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இச்சுவரொட்டியை ஒட்டி கருப்பு ஜூலை23 நாளை நினைவு கூர்ந்தனர்.